இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை சர்வதேசமும், உள்நாடும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான பொறிமுறையொன்றின் மூலம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விசாரணையின் போது, சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றச் செயல்களுக்குப் பொறுப்புக் கூறல் தொடர்பிலான அரசாங்கத்தின் உள்ளப் பொறிமுறைமை குறித்து சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை அமையும் என்பதனை உறுதியாகக் கூற முடியும் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உள்நாட்டு விசாரணை: விஜயதாஸ ராஜபக்ஷ