Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தப் பொறிமுறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைத்து பங்குதாரர்களுடனும் கட்டம், கட்டமான பேச்சுவார்த்தைகளை நடத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 29வது அமர்வு கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. இதன்போது உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து குறிப்பிட்டதுடன், செப்டம்பருக்கு முன்னதாக உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

அவரது கருத்துக்களை வெளிவிவகார அமைச்சு உள்வாங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய பேச்சாளர் மஹேஷினி கொலன்னே, அதற்கமைய கட்டம் கட்டமாக செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினை இலங்கைக்கு வரவழைத்துள்ளமை மற்றும் காணாமற்போனவர்களை கண்டறிவது தொடர்பில் செயலாற்றுவதற்கென ஐக்கிய நாடுகளிலிருந்து விசேட குழுவொன்று ஓகஸ்ட் மாதம் இலங்கை வரவுள்ளமை என்பன உள்ளக பொறிமுறைக்கான முன்னோடிச் செயற்பாடுகள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்கும் வகையில் உயர்மட்ட பேச்சுகள் ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com