Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையின் தென்னைமரவடி கிராமத்திலுள்ள காணிகளையும் வயல் நிலங்களையும் அயல் கிராமமான பதவி சிறீபுர மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியாக கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களம் காணிக்கச்சேரிகளை நடத்தி பலாத்காரமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தென்னைமரவடி கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்களே வாழ்ந்திருந்தனர்.வேறு எந்த இனத்தவரும் குடியிருந்ததில்லையென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வன்முறை காரணமாக இம்மக்கள் இடம்பெயர்ந்தமையை பயன்படுத்தி பதவியா சிறீPபுர கிராம சிங்கள மக்கள் காணிகளையும் வயல்களையும் கபளீகரம் செய்துள்ளனர். மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட தென்னைமரவடி மக்கள் தமது காணிகளுக்கோ வயல்நிலங்களுக்கோ செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இச்சூழ்நிலையில் கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களத்தினர் சமாதான முயற்சியென்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் வயல்களையும் பிரித்து எவ்வித உரித்துமில்லாத பதவியா சிறீPபுர மக்களுக்கு வழங்க முற்பட்டுள்ளனர்.

தென்னைமரவடி கிராமத்திலுள்ள பாரம்பரியமாக இருந்த தமிழ்ப் பெயர்கள் அனைத்தையும் சிங்களப் பெயர்களாக மாற்றும் தீவிரமான முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள். புதவியா சிறீபுர கிராம மக்கள் பலாத்காரமாக தாம்பிடித்த காணிகளை தமக்கும் எடுத்துக் கொண்டு தமது உறவினர்களுக்கும் பங்கு பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என கூறப்படுகின்றது.

தென்னைமரவடி மக்களிடம் வலிதான ஆவணங்கள் இருந்தும் இந்த ஆவணங்கள் செல்லுபடியற்றவை.எனது அதிகாரத்தைப் பாவித்து காணிகளை சிங்கள மக்களிற்கு பங்கிட்டுக் கொடுப்பேன் என அப்பாவி மக்களை மிரட்டி காணிகளை பங்கிடும் கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்கள ஆணையாளரின் முறைகெட்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் காத்திருக்கின்றனரெனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

0 Responses to தென்னமரவடியினில் எஞ்சியதும் பறிபோகின்றது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com