Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமைகள் பற்றி பேசி தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

வவுனியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனே தமது தலைவன் எனக் கூறுகின்றனர். இதனை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இது சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கான வெற்றி வாய்ப்பையே ஏற்படுத்துகிறது. மஹிந்தவை மீண்டும் வெல்ல வைப்பதற்கான வாய்ப்புக்களையே புலிகளின் பெயரைப் பயன்படுத்தி கூட்டமைப்பு செய்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகள் பற்றி பேசி மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர த.தே.கூ முயற்சி: வீ.ஆனந்தசங்கரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com