Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கொலைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்ட நபரொருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரன் ஆகியோரது கொலைகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட நபருக்கே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வேட்புமனுவை வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் குறித்த நபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளில் நேரடியாகப் பங்கேற்றார் என்பதற்கான ஆதாரங்கள் முழுமையாகத் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், குறித்த நபரின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

0 Responses to கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலையோடு சம்பந்தப்பட்டவருக்கு ஐ.ம.சு.கூ.வில் வேட்புமனு: விநாயகமூர்த்தி முரளிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com