தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது தென்னிலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றிவருமானால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகமொன்றிடன் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் பாராளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம். தொடர்ந்து தென்னிலங்கை தமிழ் மக்களை ஏமாற்றிவரும் என்றால் சர்வதேச உதவியுடன் பிரிந்து செல்வதன் மூலமே எமது பிரச்சனைக்கான தீர்வினைக் காணமுடியும்.” என்றுள்ளார்.

0 Responses to தென்னிலங்கை தொடர்ந்தும் ஏமாற்றினால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதே ஒரே வழி: செல்வம் அடைக்கலநாதன்