எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை யாருக்கு வழங்குவதென பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பதாக குறிப்பிட்ட அவர், நல்லாட்சிக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “கட்சியை விட நாடே பிரதானமானது என்பதாலே நாம் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் கைகோர்த்தோம். நாம் செல்வதை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களை தேசியபட்டியலினூடாக நிறுத்தவும் முயன்றனர். ஜனாதிபதி கூட நானில்லாமல் சுதந்திரக் கட்சிக்கு பாதகம் என்றார். நாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய முன் ஜனாதிபதியுடன் பேசினோம். அவரும் நல்லாட்சிக்காக தம்மை அர்ப்பணித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட இருக்கும் பிளவை தடுக்கவே மத்திய குழுவை கூட்ட இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டது. எம்மை சுதந்திரக் கட்சியின் குழுவிலிருந்து நீக்கினாலும், ஓகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் வருவோம். ஜனாதிபதியின் உரை ஐக்கிய தேசிய முன்னணிக்கோ, சுதந்திரக் கட்சிக்கோ அன்றி நாட்டுக்கே சாதகமான உரையாகும். அவர் நல்லாட்சியின் பக்கம் இருப்பது அவரின் உரை மூலம் உறுதியாகிறது.
நாம் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தாலும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் எம்முடன் உள்ளனர். நாம் வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் அவர்கள் எமக்கு பாரிய வரவேற்பளித்தனர். ஆனால், சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்களை வரவேற்க கூட்டம் இல்லை. கீழ் மட்டத்திலிருந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் செயற்பாடுகளில் இறங்கவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணியினூடு நாட்டில் நல்லாட்சி ஏற்படும். அதன் பலனை மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்தனர். அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. 13 வகை அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. 15 வருடத்தின் பின் ஓய்வூதிய முரண்பாடு தீர்க்கப்பட்டது. காஸ் விலை மீண்டும் குறைக்கப்பட்டது.
நாம் மிகச் சரியான பக்கம் இணைந்துள்ளோம். ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவரை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீக்க முடியாது. கட்சி யாப்பு படி அது இயலாத காரியம். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரை நீக்க பல வருடங்கள் முயற்சி நடந்தாலும் அது முடியவில்லை.
ஆட்சியை முன்னெடுக்க தேவையான நிதி எம்மிடம் இருக்கிறது. நிதிப் பிரச்சினை அரசாங்கத்துக்கு கிடையாது. கடந்த காலத்தில் சுங்க வரி மோசடி செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது சுங்க வரி வருமானம் அதிகரித்துள்ளது. அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டி ஆட்சியமைக்கும். எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும்” என்றுள்ளார்.

0 Responses to தேர்தலின் பின்னும் தேசிய அரசாங்கம்; பிரதமர் யாரென்பதை மைத்திரியே தீர்மானிப்பார்: ராஜித சேனாரத்ன