Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சன் குழுமத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சன் குழுமம் சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடுத் தொடர்பாக, இதில் தொடர்புடைய சன் குழுமத்தின் 742 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சன் குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இதுத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சன் குழுமம் மேல்முறையீடு செய்தது.

அதன் அடி இன்று உச்ச நீதிமன்றத்தில் 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சன் குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. இவ்வழக்கு விசாரணையில் சன் குழுமம் சார்பாக கபில் சிபல் ஆஜராவார், மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to சன் குழுமத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com