அகதிகள் தமது நாட்டின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ஹங்கேரி, குரோஷியாவுடனான தனது எல்லையை மூடியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான அகதிகள் குரோஷியாவிலிருந்து ஸ்லோவேனியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு மாத்திரம் சுமார் 2,700 பேர் ஸ்லோவேனியாவுக்குள் உள்நுழைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அவர்கள் ஆஸ்திரியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் அகதிகள் தஞ்சம் பெறும் நோக்கில் இங்குவந்திருப்பதாகவும் ஸ்லோவேனியா தெரிவித்துள்ளது.
ஜேர்மனி, ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகள் எதுநாள் வரை அகதிகளை வரவேற்பதற்கு முடிவெடுத்துள்ளதோ அது நாள் வரை ஸ்லோவேனியாவும் அகதிகளை தமது நாட்டின் ஊடாக அங்கு செல்ல அனுமதிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
செர்பியா, மசெடோனியா, கிரீஸ் ஆகிய நாடுகளைக் கடந்தே பலர் தற்போது ஸ்லோவேனியாவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களது தரவுகளை பதிவு செய்யத் தொடங்கியுள்ள ஸ்லோவேனியா அங்கிருந்து ஆஸ்திரியா எல்லைக்குள் அவர்கள் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.
ஸ்லோவேனியாவுக்குள் நுழைந்துள்ள இந்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஹங்கேரியின் முடிவால் ஸ்லோவேனியாவுக்குள் நுழையும் அகதிகள்!