Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள சூறாவளி

பதிந்தவர்: தம்பியன் 18 October 2015

சூறாவளிப் புயல் காற்றினால் பிலிப்பைன்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிலிப்பைன்ஸில், லூசன் தீவுகளில் அமைந்துள்ள காசிகுரன் எனும் நகரில் மையம் கொண்டுள்ள மிக மெதுவாக நகரும் கொப்பு சூறாவளியால், ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குச் சென்றுள்ளனர்.

மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கூரைகள், ஜன்னல் கதவுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களக பெய்துவரும் கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்புக்கள் பற்றி தகவல் எதுவும் வெளிவரவில்லை. எனினும் சுமார் 10,000 க்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள சூறாவளி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com