தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்க வேண்டும் என்றும், அவ்வாறான உறுதிப்பாடு வழங்கப்பட்டால் மாத்திரமே போராட்டத்தினைக் கைவிட முடியும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு பூராவுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கடந்த திங்கட்கிழமை முதல் நடத்தி வருகின்றனர். போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கின்றது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் மகசின் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று புதன்கிழமை மாலை சென்றிருந்தார். அப்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அது தொடர்பில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மனோ கணேசன் எழுதியுள்ளதாவது, “உண்ணாவிரத கைதிகள் தாம் தொடர்ந்து விரதத்தில் ஈடுபட போவதாக சொன்னார்கள். தமக்கு ஜனாதிபதியே உறுதி தரவேண்டும் என்று சொன்னார்கள். என்னை மிகவும் மதிப்பதாகவும், ஆனால் இதற்கு முன் இங்கு வந்த அரசியல்வாதிகளால் தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேறவில்லை என்றும் கூறினார்கள்.
நான் கடந்த ஐந்து வருடங்களில் இப்போதுதான் முதன்முறையாக இங்கு வந்துள்ளேன் என்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தினேன். என்றாலும், விரதத்தை கைவிட்டு உடனடியாக வழமைக்கு திரும்புங்கள் என்று நான் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அதுபற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறி, இன்று காலையில் இது தொடர்பில் அமைச்சரவையில் நடைபெற்ற விடயங்களையும், அதன்பிறகு இப்பிரச்சினை தொடர்பில் குழு அமைய பெற்றதையும், நான் இது தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினருடன் காத்திரமாக செயற்பட போவதாகவும் கூறி வந்தேன்.” என்றுள்ளார்.

0 Responses to “எமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும்”; தமிழ் அரசியல் கைதிகள் மனோ கணேசனிடம் தெரிவிப்பு!