Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 86 இந்திய மீனவர்களையும், இந்திய (தமிழக) சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கம் காணப்பட்டுள்ளதாக கடற்றொழிற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் நோக்கம் எமக்குக்கிடையாது. மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்ற போதும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலய முக்கியஸ்தர்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தம்மைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் போது மீனவர் விடுதலை தொடர்பில் பேசப்பட்டதுடன் அவர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தமது எதிர்ப்பையும் வெளியிட்டதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் 86 பேர் எதிர்வரும் 28ஆம் திகதியன்று விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கு தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவித்துள்ளதாகவும் மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, தமிழகத்தின் நாகபட்டணம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் கிராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவது தொடர்பில் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ள ஜெயலலிதா இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கடித மூலம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான மீனவர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 87 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 34 படகுகளையும் மீட்கவும், இலங்கை கடற்படை கப்பலால் சேதப்படுத்தப்பட்ட படகுகளை சரி செய்ய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் 800க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், இப்பிரச்சினையை தீர்க்க, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நீதிமன்றத் தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத் தீவை மீட்டால் மட்டுமே மீனவர் பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்றார்.

போராட்டத்தில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் உட்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். திடீரென கனமழை கொட்டியது. மழையையும் பொருட்படுத் தாமல், நனைந்தபடியே மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர்.

0 Responses to இலங்கை- இந்தியச் சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிக்க பரஸ்பர இணக்கம்: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com