ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்குள் நிலத்தடியில் காணப்படுவது சொகுசு மாளிகை அல்ல. அது, போர்க்காலத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
போர் நடைபெற்ற காலத்தில் இருந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அப்படியான பதுங்குகுழியை அமைக்கும் தேவையை ஏற்பட்டது. அதன் காரணமாக அதனை நிர்மாணித்தேன் என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் விமானங்களில் வந்து அப்போது தாக்கினர் என்பதை தற்போதைய இளைஞர்கள் மறந்து விட்டனர். புலிகளிடம் விமானங்கள், கப்பல்கள் இருப்பதாக கூறப்பட்ட போது நாங்கள் அதற்கு தயாரானோம். அதற்காகவே, அந்தப் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டன.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி மாளிகையில் நிலத்தடியில் காணப்படுவது சொகுசு மாளிகை அல்ல; அது பதுங்குகுழி: மஹிந்த