Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்று அதிமுக எம்பியும், மக்களவை துணை சபா நாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

அதிமுக எம்பிக்கள் கூட்டாக இன்று தம்பிதுரை எம்பி தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தனர்.அப்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை அடங்கிய கடித்தத்தை சுஷ்மா சுவராஜிடம் கொடுத்ததாக தம்பிதுரை எம்பி கூறினார்.

அதோடு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதைச் சுட்டிக்கான்பித்த அவர். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்பது தமிழக அரசின் வாதம் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

0 Responses to கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூற வேண்டும்:தம்பிதுரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com