Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அதிரடி பரிந்துரை செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை இங்கிலாந்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக வழக்கு விசாரணை ஒன்று நடைபெற்று வந்தது.இவ்வழக்கு விசாரணையின் போது, ஜான்சனை எத்தனையோ முறை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை என்று தெரிய வருகிறது.இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளி என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால், தாம் தேடப்படும் குற்றவாளி அல்ல என்றும், தமது வழக்கை விசாரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும் ஜான்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.தேடப்படும் குற்றவாளி என்பதை வேண்டுமானால் ரத்து செய்கிறோம் என்றும், அவரது வழக்கை விசாரிக்கும் உரிமை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உள்ளது என்றும் மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி கிருபாகரன். அதோடு சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு ஆண்மைத் துண்டிப்பு எனும் கடுமையான சட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், இது கடுமையான சர்ச்சையைக் கிளப்பி, எதிர்ப்பைத் தூண்டும் என்று தமக்குத் தெரியும் என்றும் கிருபாகரன் கூறியுள்ளார். ஆனால், அதற்கான சூழல் இப்போது ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ள கிருபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயதுச் சிறுமியை டெல்லியில் பலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததை சுட்டிக்காண்பித்தும் உள்ளார்.

0 Responses to சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும்: அதிரடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com