Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரியா அண்மையில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான தனது ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

இதனை வடகொரிய அதிபர் கிம் ஜொன் உங் நேரில் பார்த்து உறுதி செய்ததாக வடகொரியாவின் கேசேஎன்ஏ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அண்மைக் காலமாக அணுவாயுதப் பயிற்சி மூலமாக அச்சுறுத்தி வரும் வடகொரியா, தென்கொரியாவும் அமெரிக்காவும் நடத்தி வரும் கூட்டு இராணுவப் பயிற்சியை நிறுத்தினால் தமது அணுப் பரிசோதனையையும் தாமும் நிறுத்தத் தயார் என அதிபர் கிம் மேலும் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அணுவாயுத சோதனைகள் மூலம் உலகை அச்சுறுத்தி வரும் வடகொரியா 3 முறை அணுகுண்டுகளை வெடிக்க வைத்து சோதித்துள்ளது. மேலும் இவ்வருடம் ஜனவரி 6 ஆம் திகதி அதிசக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டையும் பரிசோதித்து வெற்றி கண்டது. பதிலாக பல உலக நாடுகளின் கண்டனங்களையும் வடகொரியா சம்பாதித்துக் கொண்டது. மேலும் பெப்ரவரி 7 ஆம் திகதி செய்மதி ஒன்றை ராக்கெட்டு மூலம் விண்ணுக்கு வடகொரியா செலுத்தியதாகவும் செய்திகள் பரவி இருந்தன. ஆனால் இதுவும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஒரு வகை ராக்கெட்டுப் பரிசோதனை தான் என உலக நாடுகள் குற்றம் சுமத்தி கண்டித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை சோதனை வெற்றி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com