Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து ஊழல் மோசடிகள் எதுவும் இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லல் மற்றும் ஊழல் மோசடிகளை மேற்கொண்டு அரச சொத்துக்களையும் அதிகாரத்தையும் முறைகேடாக பயன்படுத்தி, ஊழல்களில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்கு இத் தீர்மானங்கள் காரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெதிரிகிரிய நீர்ப்பாசன கருத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுதந்திரமான நாடு மற்றும் தூய்மையான அரசியல் எதிர்பார்ப்புடன் புதிய அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதற்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை முறியடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மே முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்மானங்கள்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com