Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் எதிரணியினருடன் நடத்தி வரும் சமாதானப் பேச்சுவார்த்தயை இன்னும் 48 மணிநேரம் நீடித்து அறிவித்துள்ளது சிரிய இராணுவம். இந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் பயனாக மத்திய சிரியாவில் அரச கட்டுப்பாட்டின் கீழ் அகப்பட்டுக் கொண்டிருக்கும் சுமார் 12 000 குடும்பங்களுக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள் சென்று சேர்ந்ததை அடுத்தே சிரிய இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி இன்று திங்கட்கிழமை கருத்துரைக்கையில், கடந்த சில வருடங்களாக உள்நாட்டுப் போர் காரணமாக சின்னா பின்னமாகியுள்ள சிரியாவில் அலெப்போவை மட்டும் உள்ளடக்கி புதிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் சிரியாவின் முக்கிய நகரங்களை இணைத்து இடைக்கால அரசை நிறுவி தீர்வை எட்டுவதற்குப் பல்வேறு வகைப் பட்ட மும்மொழிவுகள் விவாதிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த சில வாரங்களாக வன்முறை மற்றும் போர் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள பாரிய நகரம் அலெப்போ ஆகும்.

அலெப்போவில் மேற்குப் பகுதியில் கிளர்ச்சிப் படை மீது அரச ஹெலிகாப்டர்கள் தடை செய்யப் பட்ட பரெல் குண்டுகளை வீசி வருவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 9 நாட்களில் 250 பொது மக்கள் வரை அலெப்போவில் கொல்லப் பட்டுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அரசு டமஸ்கஸ்ஸில் சமாதான ஒப்பந்ததத்தை அமுல் படுத்தி இருந்தது. தற்போது நிலவும் சூழலில் அமெரிக்கா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மும்மொழிவுடன் சிரிய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையை 48 மணிநேரம் நீடித்தது சிரியா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com