எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டும் என்று நினைப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தினம் இன்று திங்கட்கிழமை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2005ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்தது அதனை எவரும் மறுக்க முடியாது. தேர்தல்கள் நடந்துவிட்டால், ஜனநாயகம் மலர்ந்து விட்டது என எவரும் கருத முடியாது. தேர்தல்கள் நடைபெறுவது, ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனால், அது முடிவல்ல.
குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. தமது கடமையினை சுதந்திரமாக செய்த காரணத்தின் நிமித்தம் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஜனநாயகம் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும்.
பத்திரிகை சுதந்திரம் அத்தியாவசியம். உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு பாரிய பங்களிப்பாக இருந்துள்ளது. அவற்றினை அழிக்க முடியாது. எனவே, எமது விடுதலைப் போராட்டம் விரைவில் கௌரவமான நிலைக்கு வரும் என நினைக்கின்றோம். அவற்றினை நம்புகின்றோம். அவ்வாறான நிலைமை ஏற்படுகின்ற பொழுது, உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும்.
உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பினை மறந்துவிட முடியாது. அவ்விதமான சூழலில், அவர்களுக்குரிய கௌரவத்தினையும், மரியாதையினையும், செலுத்த வேண்டியது எம் எல்லோரினதும் கடமை.
இந்த நிகழ்வினை நடாத்தும் இந்த கட்டிடமும் ஒரு சரித்திரம் மிக்க கட்டிடம். ஆசியாவிலேயே சிறந்த நூலகமாக விளங்கிய ஒரு நூலகம். இது அழிக்கப்பட்டது வன்முறையின் உச்சக்கட்டம். இவைகள் அனைத்திற்கும் மத்தியில் எமது மக்கள் சலிக்காமல் உறுதியுடன் தமது உரிமைப் போராட்டத்தினை தொடர்ந்து வந்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to எமது விடுதலைப் போராட்டம் கௌரவமான நிலையை எட்டும்: சம்பந்தன்