பிரிட்டன் தலைநகர் இலண்டனில் கடந்த 5 ஆம் திகதி மாநகர மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 44 வயது சாதிக் கான், கான்சர்வேட்டிவ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சேக் கோல்ட்ஸ்மித் இனை வெற்றி கொண்டு இலண்டன் மாநகரின் முதல் முஸ்லிம் மேயராகப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த மாநகர தேர்தலில் 46% வீத வாக்குகள் பெற்று சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார். சாதிக்கானின் குடும்பம் சாதிக் சிறுவனாக இருக்கும் போதே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்து விட்டது. சாதிக் கான் தந்தை ஒரு பேருந்து ஓட்டுனர் ஆவார். இங்கிலாந்தில் படித்து வளர்ந்த சாதிக் கான் மனித உரிமைகள் வழக்கறிஞர் மற்றும் கிழக்கு இலண்டனில் உள்ள டூடிங் பகுதி எம்.பி உம் ஆவார்.

0 Responses to இலண்டனின் முதலாவது முஸ்லிம் மேயராக பாகிஸ்தான் வம்சாவளி நபர் பெருமை!