காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு, மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பாக சாட்சியங்களை கடந்த மார்ச் மாதம் திங்கள்கிழமை (28) பதிவுசெய்தது.அப்போது ஆணைக்குழு முன் தனது உறவினர்கள் படையினரினால் கொல்லப்பட்ட மற்றும் கடத்தி செல்லப்பட்ட தனது உறவினர் இது வரை விடுவிக்கப்படாமை தொடர்பாக இவர் சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த குடும்ப பெண்ணாகிய ஜெ.ஜெகயோதிஸ்வரி சாட்சியமாக தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ச்சியாக மன்னாரில் புலனாய்வு பிரிவினரால் குறித்த குடும்ப பெண் அச்சுறுத்தப்பட்டு வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இரவு 7:30 மணியளவில் கடற்படை புலனாய்வு துறையினர் மூவர் தான் இல்லாதபோது தனது வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த பிள்ளைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தவாறு யார் என கேட்டபோது பதில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இந்த நிலையில் பிள்ளைகள் அயல் வீட்டாரை அழைத்துள்ளனர். இதனையடுத்து அயல் வீட்டு பெண் ஒருவர் வந்து பார்த்தபோது குறித்த மூன்று பேரையும் அவதானித்துள்ளார்.
இதன் பின் அந்தப் பெண்ணிடம் தம்மை புலனாய்வு பிரிவினர் என்று தெரிவித்ததுடன் தம் ஜெகயோதிஸ்வரியை தேடிவந்ததாகவும் காணாமல்போனோர் தொடர்பாக கூட்டம் நடைபெறவுள்ளதால் விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து வீட்டில் இருந்த குழந்தைகளையும் அச்சுறுத்தி சென்றுள்ளதுடன் குறித்த கடற்படை புலனாய்வு பிரிவினர் தொலைபேசி இலக்கத்தினையும் பிள்ளைகளிடம் வழங்கி குறித்த பெண்ணை புலனாய்வு பிரிவிருடன் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to காணாமல் போனோர் குடும்பங்களை மிரட்டும் புலனாய்வு!