Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரதூரமான சுற்றாடல் அழிவினை ஏற்படுத்தி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்கு பொலிஸ்மா அதிபரின் கீழ் விசேட பொலிஸ் குழுவினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார்.

புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் கொழும்பு புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றதுடன், இதன்போது ஜனாதிபதி அவர்கள் இப்பணிப்புரையினை வழங்கினார்.

கடல் சம்பந்தப்பட்ட அனைத்து வளங்களினதும் உரிமை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நாடுபூராக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத அகழ்வுகள் தொடர்பில் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் இந்நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்திக் கருத்திட்டங்களை தாமதமின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் உதவியினை தாமதமின்றி வழங்கும் தேவையினை ஜனாதிபதி இதன்போது உத்தியோகத்தர்களிடம் சுட்டிக்காட்டினார்.

0 Responses to சட்டவிரோத அகழ்வுகளை தடுக்க சுற்றிவளைப்புக்கள்: மைத்திரி உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com