கச்சத்தீவு அந்தோனியார் கோயில் இடிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலை இடித்துவிட்டு, புதிய தேவாலயத்தை இலங்கை அரசு கட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுக் குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை மீனவர்கள் மற்றும், தமிழக மீனவர்கள் இணைந்து தேவாலயத்தை புதிதாக கட்ட ஒப்புதல் தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்போது தேவாலயத்தை இடித்துவிட்டு இலங்கை மட்டுமே தன்னந் தனியாக புதிய தேவாலயத்தை கட்டுவதாக அறிவித்துள்ளது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் இது ராமேஸ்வரம்,நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழக மீனவர்களின் பாரம்பரிய வழிப்பாட்டுத் தலம். இலங்கை மட்டுமே தன்னந்தனியாக தேவாலயத்தைக் கட்டும்போது, தமிழக மீனவர்களுக்கான வழிப்பாட்டு உரிமை மறுக்கப்படுமோ என்கிற அச்சம் உள்ளது. எனவே, இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று ஜெயலலிதா கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to கச்சத்தீவு அந்தோனியார் கோயில் இடிப்பு: ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்!