Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக தலைநகர் டாக்கா உட்பட 14 மாவட்டங்களில் கன மழை புயலுடன் இடி மின்னல் தாக்கி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி மட்டும் இதுவரை 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் வங்காள விரிகுடாவுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடான பங்களாதேஷில் மார்ச் முதல் மே வரையிலான பருவ கால மேற்கு நோக்கி நகரும் புயலில் வானிலை மிக மோசமாக இருப்பது வாடிக்கையாகும்.

இதனால் அங்கு ஓராண்டுக்கு மின்னல் தாக்கி மட்டும் சராசரியாக 300 பேர் பலியாகி வருகின்றனர். சமீப நாட்களாக மின்னல் தாக்கி பலியானவர்களில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் வெளியில் வேலை பார்த்து வரும் பெண்கள் ஆகியோரே அதிகளவு இறந்துள்ளனர். இதேவேளை ஒவ்வொரு வருடமும் வங்கதேசத்தில் பெய்து வரும் இடி மின்னலுடன் கூடிய பருவ மழை நூற்றுக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி வருவது ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வராது வெளி உலகுக்கு மறைக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பங்களாதேஷில் புயல் மழை மின்னல் தாக்கி 42 பேர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com