சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமாரின் மனைவி ராதிகா மருத்துவ ரீதியாக, தமது கணவர் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
திருச்செந்தூரில் இரட்டை இலைச் சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார்.இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது இவருடன் கூடவே சென்ற ராதிகா, அன்று முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருச்செந்தூர் தொகுதியில் கணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகிறார். படித்தவர், பண்புள்ளவர், நேர்மையானவர் என்று கணவர் குறித்து கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.
அங்குள்ள வயதான பெண்களிடம் நடைப்பயணம் சென்று வாக்குச் சேகரித்த ராதிகா, மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமல் படுத்த முடியும் என்று கூறினார். அது ஏன் அப்படி என்றால், மதுவுக்கு உங்களது கணவர்கள் அடிக்ட் ஆகி இருப்பாங்க, அவர்களை திடீரென்று குடிக்காதீர்கள் என்று சொன்னால், அவர்களுக்கு உடம்புக்கு எதாவது வந்துவிடும், சீரியஸாகி விடுவார்கள்.அதனால்தான் அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதாகக் கூறியுள்ளார் என்று மருத்துவ ரீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

0 Responses to ராதிகா சரத்குமார் மருத்துவ ரீதியான தேர்தல் பிரச்சாரம்!