ஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை கடந்து வந்துள்ள இலங்கை, இன்று சர்வதேச நாடுகளுடன் ஊழலுக்கு எதிராக கைகோர்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான மாநாட்டில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளதாவது, “ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தமைக்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உலகெங்கிலும் பரவியிருக்கும் ஊழலுக்கெதிராக போராடும் முன்னணியாக எமது உள்ளங்களை இணைப்பதற்கு எடுக்கப்படும் ஒரு விசேட நடவடிக்கையாக இந்த மாநாட்டைக் குறிப்பிட முடியும்.
ஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை இலங்கை கடந்துள்ளது. அந்த நிலைமைகளுக்கெதிராக மக்கள் வெளிப்படுத்திய அக்கறையின் பிரதிபலனாக 2015 ஜனாதிபதித் தேர்தலில் அந்த ஆட்சியை மாற்றி நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது.
அந்தவகையில் இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாக அந்த ஊழல்மிக்க ஆட்சியிலிருந்தும் அவர்களின் அடிவருடிகளிடமிருந்தும் மீட்சி பெற்றனர். இன்று இலங்கையில் இருபெரும் அரசியல் கட்சிகளுடன் கூடிய ஒரு தேசிய அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. என்னுடையவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் வழிகாட்டலின் கீழ் அந்த ஆட்சி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்டஆட்சியைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையிலேயே நாம் மக்கள் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளோம். எனவே நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துக்கட்டுவதை எமது அடிப்படைப் பொறுப்பாக நாம் கருதுகின்றோம். இது தொடர்பில் நாம் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகப்படுத்தியதனூடாக ஜனாதிபதியிடமுள்ள நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த மாநாட்டுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட முடியாது என தீர்மானிக்கப்பட்ட அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய பல அதிகாரங்களை நான் பாராளுமன்றத்திற்கு வழங்கியிருக்கிறேன்.
எவ்வாறானபோதும், எனது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட ஆட்சியைப் பாதுகாத்தல் மற்றும் ஊழலற்ற ஒரு நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பின் காரணமாக நான் ஊழலுக்கெதிரான ஒரு அலுவலகத்தைத் தாபித்துள்ளேன். குறிப்பாக ஊழல் மோசடியை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு ஆணைக்குழுவை அமைத்துள்ளேன். தகவல் அறியும் சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் கணக்காய்வு சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த எல்லா நிறுவனங்களினதும் செயற்பாடுகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
அதேபோன்று நாம் பொலிஸ் துறையில் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவொன்றை அமைத்துள்ளோம். இந்த நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பது முக்கிய நிதிசார்ந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகும். அவர்களது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக இதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் நாம் அந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம்.
தற்போது பல முக்கிய நிதிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து போன்று உலக வங்கிகளிலிருந்து எமக்கு அதற்காக விசேட உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய சொத்துக்கள் தொடர்பில் தகவல்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களைக் கண்டறிவதற்காக உதவுவதற்கு இந்த மாநாட்டின்போது முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தைத் தாபிப்பதற்கு இம்மாநாட்டில் முன்மொழியப்பட்டிருப்பது தொடர்பிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று ஊழல்களைக் கண்டறிவதற்கும் ஒழித்துக்கட்டுவதற்கும் தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்காக நாம் தலைவர்கள் என்றவகையில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to ஊழல் யுகத்தைக் கடந்து வந்துள்ள இலங்கை; இன்று ஊழலுக்கு எதிராக கைகோர்த்துள்ளது: ஜனாதிபதி