Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரியை அசௌகரித்திற்கு உள்ளாக்கும் வகையில் முறையற்றுப் பேசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜவர்த்தன அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் விசேடமாக சம்பூர் பகுதியின் மறுசீரமைப்பு பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபடுகின்றது. தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து சம்பூர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூட வசதியை ஏற்படுத்திக்கொடுக்க பெறுமதியான பொருட்கள் அன்று கடற்படையினரால் வழங்கப்பட்டது.

சம்பூர் மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை கடற்படையினர் இதுவரைகாலமும் செய்து கொடுத்துள்ளமை குறித்து மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மகிழ்ச்சியடைய வேண்டும். அந்த நிகழ்வில் அவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருப்பின் பொறுப்புமிக்க பதவி வகிக்கும் அரசியல்வாதி என்ற வகையில் அதனை அவர் புத்திசாதுர்யமாக தீர்த்திருக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர உயிர்த் தியாகங்களைச் செய்த இராணுவத்தினர் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் செயற்பட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. அவர்களின் அபிமானத்தைப் பாதுகாக்க எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்னிற்போம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பொறுப்புமிக்க அரசியல்வாதியாக எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க முடியாது: ருவான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com