தமிழக சட்டப் பேரவைக்கு 13வது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், “தொடர்ச்சியாக சட்டப் பேரவைக்கு தெரிவு செய்யப்படுவது சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும்.
அத்தோடு, ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் சாபில் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடிதம்!