Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க் காலத்திலேயே வீழ்ச்சியடைந்திராத வடக்கின் கல்வி வளர்ச்சி, போருக்கு பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, ”தமிழ் மக்கள் அரசியலில் அடிமைப்பட்டவர்களாக என்றைக்குமே இருந்ததில்லை. ஆனால், தற்போது போதைக்கும், மதுவுக்கும் அடிமைப்பட்ட சமூகமாக மாறி நிற்கின்றனர். வன்முறைகள் அதிகரித்துள்ளன. போதைக்குள் சிக்குண்டுள்ள மாணவ சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதுவே, வடக்கின் பாரம்பரிய கல்வி வளர்ச்சியை மீளக் கொண்டுவரும்.” என்றுள்ளார்.

0 Responses to போருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com