அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச மருத்துப் பரிசோதனை வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை, புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய 103 முன்னாள் போராளிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள உறவினர்கள், சர்வதேச மருத்துவர்களினால் பரிசோதனை செய்யப்பட்டு முன்னாள் போராளிகளின் உடல்நிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
காணாமற்போனவர்களை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் போராளிகள் மற்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலவே மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் நாம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போது, ஒருநாள் போராளிகளாக இருந்தாலும் தம்மிடம் வந்து சரணடையுமாறு இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.
அதற்கமைய 2500க்கு மேற்பட்ட போராளிகளை வட்டுவாகலில் வைத்து நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம். ஆனால், இதுவரை உயிரோடு ஒப்படைத்தவர்களின் முடிவும் வரவில்லை. காணாமற்போனவர்களின் முடிவும் எமக்கு கிடைக்கவில்லை. அனைவரையும் நம்பி ஏமாந்து விட்டோம்.
எனவே, இதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே சரியான தீர்வு ஆகும். அதிலும் பாதிக்கப்பட்ட இடத்தில் தான் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு பின் விடுதலை செய்வதற்கு முதல் நாட்களில் சர்வதேச மருத்துவர்களால் அவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எந்த விதமான நோய்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் விடுதலையாகிய முன்னாள் போராளிகள் 103 பேர் சந்தேகத்துக்கிடமான நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அரசாங்கம் அதை மூடி மறைக்கிறது.
எனவே இலங்கை மருத்துவர்கள் முன்னாள் போராளிகளை பரிசோதிப்பதை விடுத்து சர்வதேச மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எமது உறவுகளுக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் எமது வாழ்நாளை கழிக்கிறோம். எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நீதியான செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேசம் முன்வரவேண்டும்.” என்றுள்ளார்கள்.

0 Responses to புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச மருத்துவப் பரிசோதனை வேண்டும் - உறவினர்கள் கோரிக்கை!