Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது சுமூகமாக இருக்காது என்கிற போதிலும், பிரித்தானியா மிக விரைவாக வெளியேறுவதையே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக அதன் தலைவர் ஜான் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதன் செயலாக்கத்தை ஒக்டோபர் மாதம் வரை பிரித்தானியா தள்ளி வைத்துள்ளது ஏன் என்று புரியவில்லை.

இந்தப் பிரிவினை சுமூகமானதாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும், அது அதிக வலியை ஏற்படுத்தாமல் மிகத் துரிதமாக நிகழ்ந்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். ‘பிரித்தானிய வெளியேற்றத்துக்கு’ ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரித்தானியாவுக்கும் மிக மோசமான நாள்.” என்றுள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் அநேகமானவை பிரித்தானியா விரைவாக வெளியேற வேண்டும் என்பதையே விரும்புகின்றன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மிக விரைவாக வெளியேற வேண்டும்; பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அழுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com