ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களிலிருந்து உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் தன்னை விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதுபோல, கோப் குழுவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தி நல்ல முடிவை வழங்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அர்ஜூன மகேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதியோடு அவருடைய பதவிக் காலம் முடிவடைகின்ற நிலையில், கோப் விசாரணைகள் முடிவடையும் வரையில் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கான கால நீடிப்பைக் கோரப் போவதில்லை என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to என்னை குற்றச்சாட்டுக்களிலிருந்து நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன: அர்ஜூன மகேந்திரன்