Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ‘ஐயா’ என்றே தான் அழைப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று தான் தென்னிலங்கை ஊடகங்களில் குறிப்பிட்டதாக பரப்பப்படும் வதந்திகள் குறித்து பேஸ்புக்கில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனோ கணேசனின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தெற்கின் 'சிங்களம் மட்டும்' என்ற நிலைபாட்டுக்கு வடக்கில் 'தமிழ் மட்டும்' என்ற பதில் வரும். வடக்கின் 'தமிழ் மட்டும்' என்ற நிலைப்பாட்டுக்கு, தெற்கில் 'சிங்களம் மட்டும்' என்ற பதில் வரும், என்று நான் கூறியுள்ளேன்.

இப்போது யாழ் பல்கலைக்கழக சம்பவம் பற்றி பேசும் நீங்கள், ஏன் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற, கிழக்கு பல்கலைக்கழக சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர் பற்றி பேச முன்வரவில்லை என்று நான் கேள்வி எழுப்பியுள்ளேன்.

புலிகள் தலைவர் பிரபாகரனை ஐயா (மஹத்யா) என்றுதான் அழைக்கிறேன் என்றும் சொன்னேன். இவை எல்லாம் இங்கே தெற்கில் இருந்தபடி தெற்கு ஊடகங்களில் சிங்கள மொழியில் கூறியுள்ளேன்.

இதுவும் போதாதாம். நான் தெற்கில் இருந்தபடி சிங்கள ஊடகங்களில் இன்னமும் அதிகமாக தமிழ் தேசியம் பேச வேண்டுமாம். எங்கோ இருந்துக்கொண்டு என்னை இப்படி செய்யுங்கள், அப்படி சொல்லுங்கள் என்று சொல்லும் இவர்கள், என்னையும், தமிழ் மக்களையும் எங்கே அழைத்துக்கொண்டு போக நினைக்கிறார்கள்.” என்றுள்ளது.

0 Responses to தலைவர் பிரபாகரனை ‘ஐயா’ என்றுதான் அழைக்கிறேன்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com