Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொருளாதார மையத்தின் சந்தைகளை எங்கெங்கு அமைப்பது என்பது தொடர்பில், நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டே இறுதி முடிவெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொருளாதார மையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையப்போவது எல்லோரும் அறிந்ததே. மாங்குளத்தில் கடல் உணவு சம்பந்தமான சந்தையும், வவுனியா மதகுவைத்த குளத்தில் மரக்கறி சந்தையும் நிறுவப்படும் என்ற செய்தி மக்களிடையே பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன. எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமான தீர்மானம், ஆலோசனைகள் பெற்ற பின்னர் எம்மால் எடுக்கப்படும். தீர்மானம் எடுக்கப்படாத ஒரு விடயம் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” என்றுள்ளார்.

0 Responses to நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com