நாட்டில் வளர்ந்து வரும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்னெடுத்துள்ள பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்ற வேளையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கத்தால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லிணக்கத்தை சீர் குலைக்க எவரையும் அனுமதிக்கப் போவதில்லை. கூட்டு எதிரணி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே இவ்வாறான பேரணியையும், பாத யாத்திரைகளையும் முன்னெடுக்கின்றது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மஹிந்த அணியின் பேரணி தோற்கடிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா