Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!

பதிந்தவர்: தம்பியன் 28 July 2016

மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

'ஹெலோ கோப்' நிறுவனத்திடமிருந்து 125 மில்லியன் ரூபாய்க்கான பங்குகளைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே, நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாமல் ராஜபக்ஷவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், அதனால், அவர் உள்ளிட்ட அறுவர் மீது, பணச் சலவைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கூறியே, இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com