Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துருக்கி தனது சிறைகளில் உள்ள 38 000 கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆயினும் கொலை, தீவிரவாதம் மற்றும் பாலியல் குற்றம் போன்ற மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை அளிக்கப் படாது எனவும்  அறிவிக்கப் பட்டுள்ளது.

துருக்கி அரசு தனது சிறைகளில் இடவசதியை ஏற்படுத்தி அதில் அண்மையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான மக்களை அதில் அடைக்க முனைவதும் இவ்வாறு  பாரியளவில் கைதிகளை விடுவிக்கக் காரணம் என்று கூறப் படுகின்றது. இருந்த போதும் உண்மையான காரணம் கூறப்படவில்லை. துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டு பல ஆயிரக் கணக்கான போலிசாரும் இராணுவத்தினரும் கைது செய்யப் பட்டு சிறைத் தண்டனை  அளிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த முயற்சி முறியடிக்கப் பட்டதை அடுத்து 3 மாத கால அவசர நிலை பிரகடனத்தை  அரசு விதித்திருந்தது.

இந்த அவசரநிலைப் பிரகடனம் முடியவுள்ள தருணத்தில் குறித்த 38  000 கைதிகளும் விடுவிக்கப்  படலாம் எனத் தெரிய வருகின்றது. ஜூலை 15 ஆம் திகதியே ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்ட போதும் ஜூலை 1 இலிருந்து குற்றம் புரிந்து சிறையில் அடைக்கப் பட்டவர்கள் விசாரணை நிமித்தம் தடுத்து வைக்கப் படுவார்கள் என அறிவிக்கப்  பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான ஃபெத்துல்லா குலென் தலைமையில் துருக்கியில் மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் போது 270 பொது மக்கள் பலியாகி இருந்தனர். இந்த முயற்சி முறியடிக்கப் பட்டதை அடுத்து  உடனடியாக இதில் ஈடுபட்ட இராணுவம், போலிஸ் மற்றும் பொதுமக்கள் என சுமார் 35 000 பேர் கைது செய்யப் பட்டனர் என்பதும் பின்னர் படிப் படியாக பொது மக்கள் விடுவிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுமார் 38 000 கைதிகளை பரோலில் விடுவிக்க துருக்கி திட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com