சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு திமுக சுறுப்பினர்களுக்குத் தடை விதித்ததை அடுத்து, அங்கு திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
நேற்று சட்டப்பேரவையில் திமுகவினர் அமளியை ஏற்படுத்தினார்கள் என்று, சபாநாயகர் திமுக உறுப்பினர்கள் 80 பேருக்கும் ஒரு வாரத்துக்கு பேரவை கூட்டத்தில் கலந்துக்கொள்ளத் தடை விதித்து இருந்தார். எனவே, இன்று திமுக உறுப்பினர்கள் பேரவை வளாகத்தினுள் ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்குச் செல்ல முற்பட்டபோது 4ம் எண் வாசலின் முன்பு அனைத்து உறுப்பினர்களும், காவலர்களால் த்தடுத்து நிறுத்தப்பட்டனர்.பின்னர் அனைவரும் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரும் உறுப்பினர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள், நேற்று அவைக்கு வராத திமுக உறுப்பினர்கள் 8 பேர் அவை நடவடிக்கைகளில் இன்று பங்கேற்று உள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் பேரவை வளாகத்தினுள் இருக்கும் அறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு!