Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்தால் தவறு யார் மீது என்று தெரியும் என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் ஒருவர் ஸ்டாலின் பயணம் செய்த நமக்கு நாமே விடியல் திட்டத்தை விமர்சித்தார் என்றும், இதனால் அவையில் அமளி நிலவியது என்றும் தகவல் வெளியானது.அதோடு, முதலமைச்சரே நமக்கு நமே திட்டத்தை விமர்சித்தார் என்பதால், இது நமக்கு பெருமைதான் என்று ஸ்டாலின் கூறியதாகவும், இதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 

எனவே, அதிமுக உறுப்பினர் கூறியதையும் அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூற, திமுகவினர் ஸ்டாலின் கருத்தை ஆமோதித்து, அமளியில் ஈடுபட்டனர்.இதனால், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தனர் என்று, திமுக உறுப்பினர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியில் விட்டதோடு, 7 நாட்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவும் சபாநாயகர் திமுக உறுப்பினர்களுக்குத் தடை விதித்தார். இதையடுத்து இன்று சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அவை நடவடிக்கைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ல்தால்  மட்டுமே தவறு யார் மீது என்று தெரியும் என்றும், அவை நடவடிக்கைகளுக்கு யார் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்றும் தெரியும் என்று கூறினார்.

கடந்த முறை தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்த போதே, அவை நடவடிக்கைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்றும், இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to நேரடி ஒளிபரப்பு செய்தால் தவறு யார் மீது என்று தெரியும்: ஸ்டாலின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com