Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரத் போராட்டம் நேற்று புதன்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உண்ணாவிரதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு, வாக்குறுதியை அளித்த பின்னரே உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் உண்ணாவிரதிகளிடம் தெரிவித்திருந்தார்.

ஆயினும், இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக இரவு - பகலாகத் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்னால் கடந்த சனிக்கிழமை காலை முதல் ஒன்றுகூடிய மக்கள், நேற்று வரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை நடத்துபவர்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இராணுவத்தினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

0 Responses to சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com