திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை என்று சபாநாயகர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று திமுக எம்எல்ஏக்கள் 80 பேர் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தனர் என்று, சபாநாயகர் தனபாலால் அவை நடவடிக்கைகளில் இருந்து 7நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து இன்றைய நடவடிக்கைகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பேரவை வளாகத்தினுள் இருக்கும் திமுக உறுப்பின்பர்களின் அறைக்கும் அனுமதிக்கப்படவில்லை. எனவே, திமுக எம்எல்ஏக்கள், பேரவை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத 8 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று அவை நடவடிக்கைகளில் கலந்துக்கொண்டனர். இவர்கள்;அனைவரும் அப்போது திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்டை ரத்து செய்து, அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்று தெரிய வருகிறது. ஆனால், திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்டை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளாராம் சபாநாயகர் தனபால்.

0 Responses to சஸ்பெண்ட் விவகாரத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை: சபாநாயகர் திட்டவட்டம்