அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பொய்யென கண்டறியப்பட்டால், சர்வதேச ரீதியில் தமிழர்கள் பொய்யர்கள் ஆக வேண்டியிருக்கும் என்று வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வுகள் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைக் கட்டடத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பா.டெனீஸ்வரன் கூறியுள்ளதாவது, “முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்டுள்ளது என அனைவரும் வாதம் புரிகின்றார்கள். அதனடிப்படையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்படுமாயின், அதன் பின்னர் தமிழர்கள் சொல்லும் அனைத்தும் பொய் என சர்வதேசம் எண்ணும் நிலைமை ஏற்படும். எனவே, இவ்வாறான விடயங்களை நாம், மாகாண சபையில் பிரேரணை கொண்டுவந்து ஆர்ப்பரித்து செய்யக்கூடாது. இதனை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டிருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to விச ஊசி விவகாரம் பொய்த்தால்; சர்வதேச ரீதியில் தமிழர்கள் பொய்யர்களாவர்: பா.டெனீஸ்வரன்