வடக்கு - கிழக்கினை இணைக்க நினைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது என்று கூட்டு எதிரிணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முயற்சித்தாலும், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே, ஒருபோதும் நிறைவேறாத ஒரு கனவுக்காக சம்பந்தன் நாடகமாடிக்கொண்டிருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவையும் மீறிய சர்வதேச சக்தி ஒன்றின் கைப்பொம்மையாக சம்பந்தன் இன்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் எவ்வாறுதான் முயற்சித்தாலும் ஒருபோதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கை இணைக்கும் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது: தினேஷ் குணவர்த்தன