Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு ‘வெண்தாமரை’யை சின்னமாக கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய கட்சியின் பெயர் என்ன என்பது தொடர்பில் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று கூட்டு எதிரணியின் உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சி தொடர்பில் கூட்டு எதிரணியின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளின் கூட்டணியின் ஏற்பாட்டாளர் உதேதி அத்துகோரல தெரிவிக்கையில், 'புதிய கட்சியை உருவாக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை, புதிய கட்சி உருவாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பலரும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். எவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் எங்களுடைய பயணத்தை தடுத்துநிறுத்தமுடியாது' என்றுள்ளார்.

0 Responses to வெண்தாமரை ஏந்தி வருகின்றது மஹிந்தவின் புதிய கட்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com