ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குண்டு துளைக்காத நவீன ரக உடை, மற்றும் வாகனங்கள் வழங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்துவது என்பதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், அங்கு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எனவே, வீரர்களின் உயிர்ப் பாதுகாப்பை மனதில் வைத்து, வீரர்களுக்கு அதி நவீன குண்டு துளைக்காத ஆடைகள் மற்றும் வாகனங்கள் வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 2 ஆயிரத்து 700 குண்டு துளைக்காத ஆடைகளும், 183 குண்டு துளைக்காத வாகனங்களும் ரிசர்வ் படை வீரர்களுக்கு மிக விரைவில் அமைச்சகம் வழங்க உள்ளது.

0 Responses to ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குண்டு துளைக்காத நவீன ரக உடை, வாகனங்கள்!