ஜப்பான் நாட்டிடமிருந்து 12 நவீன விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்று இருந்தபோது,அந்நாட்டிடமிருந்து 12 நவீன விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதாகத் தெரிய வருகிறது.இந்நிலையில், வருகிற 11 ம் திகதி பிரதமர் ஜப்பான் செல்கிறார் என்றும்,அப்போது 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த நவீன ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் கை எழுத்தாகும் என்றும் தெரிய வருகிறது.
இதற்கு இன்று கூடும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும்,வாங்க உள்ள 12 விமானங்களில் 6 விமானங்களை கடற்படைக்கும், மீதம் உள்ள 6 விமானங்களை கடலோர காவல் படைக்கும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

0 Responses to ஜப்பான் நாட்டிடமிருந்து 12 நவீன விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்