சிறுபான்மையினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற்றுக் கொண்டதுடன் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழியைப் பின்பற்ற முயன்றே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தோற்றுப்போனார் என்று முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன பின்பற்றிய யுக்திகளையே ஹிலாரி கிளின்டனும் பின்பற்றினார். எனினும் ஹிலாரியின் இந்த யுக்தி கைகொடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தயான் ஜயதிலக கூறியுள்ளதாவது, “சிறுபான்மை மக்களின் வாக்குகளை உச்ச அளவில் பெற்றுக்கொள்வதுடன், பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறுவதே ஹிலாரியின் நோக்கமாக அமைந்திருந்தது. எனினும், டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வெற்றியீட்டியுள்ளார். வெள்ளையின பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வரும் அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாக அமையவில்லை. வெள்ளையின ஆண்கள் அதிகளவில் ட்ரம்ப்பிற்கு வாக்களித்துள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி வழியைப் பின்பற்ற முயன்று ஹிலாரி தோற்றுப்போனார்: தயான் ஜயதிலக