புதிய ரூபாய் நோட்டுக்களை பாகிஸ்தானால் போலியாக அச்சடிக்க முடியாது என்று உளவுத்துறை வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரூபாய் நோட்டுக்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிக அளவில் இருப்பதால், பாகிஸ்தானில் உள்ள கிரிமினல் நெட்வொர்க்குகளால் இதை போலியாக அச்சடித்து புழக்கத்தில் விடுவது கடினம் என்று உளவுத்துறை வட்டார தகவல்கள் கூறியுள்ளதாக ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ரா உளவுப்பிரிவு, உளவுத்துறை, வருவாய் உளவுத்துறை போன்றவற்றின் அதிகாரிகள், ரகசியமாக கடந்த ஆறு மாதங்களாக தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ஆய்வு செய்தனர். ஆனால், புதிய ரூபாய்நோட்டுக்களில் இடம் பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களை வெளியிட அந்த அதிகாரி மறுத்துவிட்டார். இந்த நோட்டுக்களை போலியாக தயாரிப்பது மிகவும் கடினமான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் ரூபாய் தாள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடைபெற்று வருவதாக உளவுத்துறை மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கியிடமும் தகவல் அளித்தது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ் ஐ இதை மேற்பார்வையிட்டு, தாவூத் இப்ராகீம், லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் நெட்வொர்க் மூலமாக இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதிய ரூபாய் நோட்டுக்களை பாகிஸ்தானால் போலியாக அச்சடிக்க முடியாது: உளவுத்துறை