சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை நடைபெறும் கோயம்பேட்டில் கடந்த 2 நாட்களாகவே வியாபாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர்.. மொத்தமாக காய்கறி, பழங்கள் வாங்கச் சென்ற சில்லறை வியாபாரிகளிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மொத்த விற்பனை வியாபாரிகள் வாங்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். அழுகும் பொருட்களை விற்கவில்லை என்றால் நாளை அது குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்பதால் பல மொத்த வியாபாரிகள் கடனுக்கு காய்கறி விற்றுள்ளனர்.
வாடிக்கையாக வாங்குபவர்களுக்குத்தான் கடனுக்கு கொடுக்க முடியும் என்பதால் மொத்த வியாபாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டு காய்கறிகள் தேங்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது.
வாடிக்கையாக வாங்குபவர்களுக்குத்தான் கடனுக்கு கொடுக்க முடியும் என்பதால் மொத்த வியாபாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டு காய்கறிகள் தேங்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது.

0 Responses to சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகள் அழுகும் நிலை