நாட்டில் முறைகேடாக சொத்துக்களை சேர்ந்து பெரும் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களைக் காப்பாற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயன்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
முறைகேடான முறையில் சொத்துக்களை குவித்து, நிலங்களை கையகப்படுத்திக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரின் மகன்கள் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தின் ஊழல் குறித்த ஆதாரங்கள் இருந்தபோதிலும் அவர்களை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘மோசடியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள்’ என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ராஜபக்ஷ குடும்பத்தின் தவறுகளுக்கு எதிராக ஆதாரம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகின்றனர். ராஜபக்ஷக்களின் செல்வங்கள் டுபாயில் உள்ள வங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், டுபாய் அரசாங்கம் தகவல்களை வெளியிட மறுக்கின்றது என்றும் அவர் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
ஆனால், நான் கூறுவது ஒன்று மட்டுமே; டுபாய்க்கு செல்வதற்கு பதிலாக அம்பாந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸை சென்று ராஜபக்ஷக்களின் சொத்து தொடர்பில் தகவல் திரட்டுங்கள். ஷிரந்தி ராஜபக்ஷ, அவரது மகன்களான யோசித ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி பாரஸ்ட் ஆகியோரின் பெயர்களின் கீழ் பல்வேறு உடைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பஷில் ராஜபக்ஷவிற்கு கம்பஹா தொடக்கம் கல்கிஸ்ஸை வரை மற்றும் அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு - 7 வரையில் நிலங்கள் இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களைக் காப்பாற்ற நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது: அநுர